புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கணேசன் (58), சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த ஜல்லிக்கட்டில் பூமிநாதன் (52) மற்றும் தருமபுரி மாவட்டம் தடங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கோகுல்(14) போன்றோரை போட்டியில் கலந்துகொண்ட காளைகள் எதிர்பாராத வகையில் முட்டியதால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். அந்த வகையில் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய்.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.