முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரிடம் சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரில், நடிகரும் முன்னாள் அதிமுக நிர்வாகியுமான அஜய் வாண்டையார் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த இவரை, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார் சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர். தற்போது போலீசார் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​ஏற்கெனவே இதுபோன்ற பண மோசடி புகார்களில் சிக்கியதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. “3.5 கோடி ரூபாய் என்ன ஆனது? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது?” என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு நடிகராகவும், அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் அறியப்பட்ட அஜய் வாண்டையார் மீண்டும் ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.