ஆந்திர பிரதேச மாநிலம் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 போன்ற சூதாட்ட செய்திகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது போன்ற சூதாட்ட செயலிகளை நம்பி ரூபாய் 3 கோடி ருபாய் வரை பணம் செலுத்தி இழந்ததாக ஒரு நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஒரு சில குறிப்பிட்ட சூதாட்ட செயல்களின் விளம்பரங்களில் முன்னணி திரைப்பட பிரபலங்கள் சிலர் நடித்திருப்பது தெரியவந்தது. இதனால் திரை பிரபலங்களை நம்பி பொதுமக்கள் சிலர் சூதாட்டத்தில் பணம் முதலீடு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை பிரிவினர் விசாரணை நடத்தியனர். விசாரணையில் பிரபல முன்னணி நடிகர்களான பிரகாஷ்ராஜ், விஜய் தேவர்கொண்டா, ராணா ரகுபதி போன்ற 29-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இது போன்ற சூதாட்டம் தொடர்பாக விளம்பரங்களில் நடித்துள்ளனர் என தெரிய வந்தது.

எனவே இதுகுறித்து அமலாக்க பிரிவு போலீசார் விளம்பரத்தில் நடித்த நடிகர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று(ஜூலை 30) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்டிருந்தது. அதன் படி நேற்று  அவர் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

இவரைத் தொடர்ந்து ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா போன்றோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விஜயதேவரகொண்டா வருகிற 6-ம் தேதியும், மஞ்சு லக்ஷ்மி என்ற நடிகை ஆகஸ்டு 13-ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் நடிகர் ராணா டகுபதி ஆஜராகுவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். அதனால் அவர் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை போலீசார் உத்தரவிட்டனர்.