கேரளாவைச் சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் வேடன். இவர் அரசியல் பாடல்களை ராப் இசையில் பாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவர் தமிழ் சினிமாவில் விரைவில் ஒரு படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இவரை பல அரசியல் கட்சி தலைவர்கள் கூட பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் வேடன் மீது தற்போது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது instagram மூலமாக அறிமுகமான ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பணம் பெற்றதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இளம்பெண் வேடன் மீது புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக கொச்சியில் உள்ள திருக்காக்கரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.