உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானாவுக்கு, இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் ₹2.2 கோடி மதிப்புள்ள வைர கைக்காப்பை பரிசாக வழங்கியுள்ளனர்.
மேலும் ‘ சமீபத்தில் ‘தி பீப்பிள் கேலரி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரிஹானா, தான் அணிந்திருந்த நகைகளைப் பற்றி பேசும்போது இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அவர் அணிந்திருந்த ஆடம்பரமான வைர நகைகளுக்கு நடுவே இருந்த ஒரு நேர்த்தியான வைர டென்னிஸ் பிரேஸ்லெட்டைக் காட்டி, இது அம்பானி குடும்பத்தினர் தனக்கு அளித்த அன்புப் பரிசு என்று மிகவும் சாதாரணமாகக் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Ambani Gifts ₹2.2 Crore Diamond Bracelet To Rihanna, Singer Casually Shows Off Her Accessory In Viral Video https://t.co/2T2nQ3uwzv
“>
இந்த நேர்காணலின் போது, ரிஹானா இரட்டை டெனிம் ஆடைகளை அணிந்து மிகவும் எளிமையாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் காட்சியளித்தார். பிரபல பிராண்டுகளின் பல கோடி மதிப்புள்ள ஆடம்பர வைர நெக்லஸ், விண்டேஜ் வளையல்கள் மற்றும் பிரத்யேக ரோலக்ஸ் கடிகாரம் போன்றவற்றை அவர் அணிந்திருந்தாலும், அம்பானி குடும்பத்தின் பரிசு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சிக்குத் தனக்கெனத் தனியாக ஒப்பனை கலைஞர்கள் யாரையும் பயன்படுத்தவில்லை என்றும், தனக்கான மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தை தானே செய்துகொண்டதாகவும் ரிஹானா புன்னகையுடன் தெரிவித்துள்ளார். தற்போது ரிஹானா தனது வைர கைக்காப்பைக் காட்டும் இந்த வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
