தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் உள்ளது. அதன்படி “திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கடன் 2 மடங்காக அதிகரித்துள்ளது..” “2021ல் ரூ.5லட்சம் கோடியாக இருந்த கடன் 2026ல் ரூ.10லட்சம் கோடியாகியுள்ளது..” “கொரோனா தொற்று காலத்தை விட திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகம்..”
“திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி..”
“ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மாநிலமாக இருந்தது தமிழ்நாடு..”
“திமுக ஆட்சியில் நாட்டின் சராசரியை விட தமிழ்நாட்டின் வருவாய் குறைந்துவிட்டது..”
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி.. 2021ல் ரூ.46538 கோடியாக இருந்த வருவாய்பற்றாக்குறை 2026ல் ரூ.78,324 கோடி..
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது..
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச் செலவினம் குறைந்துள்ளது..
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் வட்டிச் செலவீனம் 22.8 சதவீதம்..
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதம்..
தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி..
வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட உச்சத்தில் இருப்பதால் திமுக அரசு வரும் முதலீடு செய்வதற்கு அல்லாமல் அன்றாட செலவுகளுக்கு கடன் தான் வாங்கி உள்ளது. வட்டி மட்டுமே வருஷத்துக்கு 67 ஆயிரம் கோடி வரையில் செலுத்துகிறது. கனிமவளத்துறையில் நடந்த ஊழல் வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.
தனிநபர் கடன் 1.28 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசின் வருமானம் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செல்கிறது. மேலும் தமிழகத்தில் சுதந்திரத்திற்கு பின் 60 வருடங்களில் வாங்கிய கடனை விட திமுக 5 வருடத்தில் வாங்கிய கடனின் அளவை அதிகம்.
2025-26 காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை 1.33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மூலதன செலவினம் 1.44% குறைந்துள்ளது. கட்டாய செலவினம் 64.4 சதவீதம் அதிகரித்துள்ளது. சொந்த வரி வருவாய் 5.45 சதவீதம் சரிந்துள்ளது.
மின் பகிர்மான கழக கடன் ரூ.1,07, 365 கோடி. மாநில போக்குவரத்து கழக கடன் ரூ.48,865 கோடி.
முதியோர் விகிதம் மிக அதிகமாக அதிகரிக்கும் பெரிய மாநிலம் தமிழ்நாடு உழைக்கும் வயதுடையவர்கள் குறைந்து வருகிறார்கள்.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு கடன் வாங்க வேண்டும் என்ற நிலைதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ளது.
புதிய நிதி ஆதாரங்களை உருவாக்காமல் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பயிர் கடன் தள்ளுபடி பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் போன்றவைகள் புதிய வருமானத்தை அதிகரிக்காமலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.
