பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இரங்கல் தெரிவித்து எழுதிய கடிதத்திற்கு மோடி பதில் எழுதியுள்ளதை நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பூ ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை குறைவு காரணமாக தனது நூறாவது வயதில் உயிரிழந்தார்.

இதனை தொலைக்காட்சி மூலம் அறிந்த பெங்களூரு மாநிலம் மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஆருஷ் பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதினான். இதற்கு கடிதம் மூலம் பதில் எழுதிய பிரதமர் மோடி சிறுவனுக்கு நன்றி தெரிவித்தார். தற்போது இதனை நடிகையும் பாஜகவின் உறுப்பினருமான குஷ்பூ பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஒரு சிறந்த பிரதமருக்கான உதாரணம் மோடியின் செயல் என குறிப்பிட்டுள்ளார்.