மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு கிடைத்தால் திருத்துதல் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு நடத்தி முடித்து விடைத்தாள்களையும் உரிய முறையில் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 12 நாட்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப தினமும் ஆசிரியர்கள் தலா 20 முதல் 25 விடைத்தாள்களை திருத்தி முடிக்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் விடைத்தாள் திருத்துதலுக்கு ஆசிரியர்களை தவறாமல் பணிக்கு அனுப்ப வேண்டும். இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து மற்றும் அபராதம் வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது