தற்போது தொடங்கியுள்ள ‘We the Leader’ இயக்கத்தின் அடுத்தகட்ட தேர்தல் திட்டங்கள் மற்றும் மெகா இலக்குகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தங்களின் புதிய இயக்கத்தின் தற்போதைய உடனடி கவனம் என்னவென்றால், தமிழ்நாட்டில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வதும், அதற்காக மக்களைத் திரட்டுவதும்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு, இந்த அமைப்பை முறைப்படி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளதாகக் கூறிய அவர், வரும் 2031ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டின் அத்தனை 234 தொகுதிகளிலும் தங்களது கட்சி எவ்வித கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிட்டு களம் காணும் என்று அண்ணாமலை தனது மாஸ் பிளானை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
