பாஜகவில் தனது 6 ஆண்டுகாலப் பயணத்தை முடித்துக்கொண்டு, அதிலிருந்து கௌரவமாக வெளியேறியுள்ளதாக அண்ணாமலை மிக முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு தான் திடீரென எடுத்தது அல்ல என்றும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே இதைப் பற்றி தான் மிகத் தீவிரமாக ஆலோசித்து வந்ததாகவும் அவர் ஓப்பனாக உடைத்துள்ளார்.

​இப்போது தான் காவி கட்சியிலிருந்து மிகவும் ‘கௌரவமான முறையில்’ (Dignified manner) வெளியேறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்று முதல் ஒரு புதிய பாதை, ஒரு புதிய இயக்கம் மற்றும் ஒரு புதிய அரசியல் பயணம் தனக்குத் தொடங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், நம்முடைய இந்த புதிய இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தையும், புதிய கோணத்தையும் நிச்சயம் உருவாக்கும் என்று அண்ணாமலை மிக நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.