“பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகி புதிய இயக்கம் தொடங்கியுள்ள சூழலில், மாநில பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

‘மாநில உரிமைகளுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அண்ணாமலை கூறியிருப்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு’ என நயினார் நாகேந்திரன் மிகக் காரசாரமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலக அளவில் எங்குச் சென்றாலும் தமிழின் பெருமை மற்றும் கலாச்சாரம் குறித்துத்தான் பெருமையோடு பேசி வருகிறார்; அதுமட்டுமன்றி, நமது பழங்காலத் தமிழ் செப்பேடுகளைக் (Copper Plates) கூடப் பிற இடங்களிலிருந்து தேடிக் கண்டுபிடித்துத் தேசத்திற்கு மீட்டுக் கொண்டுவந்து பெருமை சேர்த்துள்ளார்’ எனப் பிரதமரின் தமிழ்ப் பற்றைச் சுட்டிக்காட்டி அண்ணாமலைக்குச் சவுக்கடி கொடுத்துள்ளார்.

டெல்லி மேலிடத்தை அண்ணாமலை விமர்சித்த சில மணி நேரங்களிலேயே, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் களமிறங்கி கொடுத்துள்ள ‘ பதிலடி,  அடுத்தகட்ட அரசியல் பரபரப்பிற்கு  பிள்ளையார் சுழி போட்டுள்ளது.”