சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகக் கருதப்படும் இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில், வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நேர்ந்த அசிங்கமான கொடூரம் ஒட்டுமொத்த நாட்டையுமே தலைகுனிய வைத்துள்ளது.

மணாலியின் மிகவும் பரபரப்பான தெரு ஒன்றில் கடந்த மே 4-ஆம் தேதி பட்டப்பகலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் திட்டமிட்டு அந்தப் பெண்ணை அப்பட்டமாக வம்பிழுத்து, அநாகரீகமாகத் தாக்கி இழிவான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும் இந்த 36 விநாடி சிசிடிவி (CCTV) காட்சிகள்  வெளியாகி தற்பொழுது இணையதளத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியிலும் பீதியிலும் உறைந்துபோன அந்த வெளிநாட்டுப் பெண் நடுரோட்டில் திகைத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது.

“>

‘இப்படியெல்லாம் உள்ளூர்வாசிகள் அசிங்கமாக நடந்துகொள்வதால் தான் வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வரத் தயங்குகிறார்கள், நாட்டின் பிம்பமே கெடுகிறது’ என நெட்டிசன்கள் இமாச்சலப் பிரதேச காவல்துறையைக் டேக் செய்து (Tag) கொந்தளித்து வரும் நிலையில், ‘இந்தக் காமுகர்களை நடுரோட்டில் வச்சு வெளுக்கணும்’ என கமெண்ட் பாக்ஸ்களில் பொதுமக்கள் தங்களின் உச்சக்கட்ட ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருவதால் வடமாநில அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு வெடித்துள்ளது.”