ஆப்பிரிக்காவிலிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய தந்தை ஒருவர், தனது 14 வயது மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் குஜராத்தின் நவசாரியில் அரங்கேறியுள்ளது.
மகளின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், அவரிடம் விசாரித்தபோது, கணவனின் அசுத்தமான முகத்திரை கிழிந்தது.
மேலும் மகளின் வாயை அடைக்க கருத்தடை மாத்திரைகளை வற்புறுத்தி கொடுத்து, குடும்பத்தையே சிதைத்த அந்தப் பாதகச் செயலைக் கேட்டு உறைந்துபோன மனைவி, “எனது கணவரைத் தூக்கிலிடுங்கள், இவரை மனிதனாகவே பார்க்க முடியாது” என கண்ணீர்மல்க ஆவேசமாகப் பொங்கியுள்ளார்.
தாயின் புகாரையடுத்து, காவல்துறையினர் அந்தத் தந்தையைக் கைது செய்துள்ள நிலையில், மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
