கேரள மாநிலத்தில் நீண்ட காலம் பதவி வகித்த முதலமைச்சர் பட்டியலில் பினராயி விஜயன் நான்காம் இடம் பிடித்துள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பினராயி விஜயன் 2021 இல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் அதிக காலம் பதவி வகித்த பினராயி விஜயன் நான்காவது இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் இதுவரை 12 பேர் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். இவர்களில் நீண்ட காலம் பதவி வகித்த முதலமைச்சர்களில் இ.கே.நாயர் முதலிடத்தில் உள்ளார். இவர் 10 ஆண்டுகள் 353 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இரண்டாவது இடத்தில் கே.கருணாகரன் உள்ளார். இவர் 8 ஆண்டுகள் 315 நாட்கள் பதவி வகித்துள்ளார். மூன்றாவது இடத்தில் அச்சுதா மேனன் 7 ஆண்டுகள் 80 நாட்கள் பதவி வகித்துள்ளார். தற்போது முதலமைச்சர் பினராயி விஜயன் 6 ஆண்டுகள் 268 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.