மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போதை அவரது படிப்பையும் ஆரோக்கியத்தையும் கடுமையாகப் பாதித்ததால், கவலையடைந்த அவரது பெற்றோர் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தனர்.

மேலும் தனது மகள் 24 மணிநேரமும் மொபைலைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவரைத் தொடர்ந்து கண்காணிக்கவும் நான்கு பலத்த பாதுகாப்பு பவுன்சர்களை அவர்கள் பணியமர்த்தியுள்ளனர். இந்த பவுன்சர்கள் சுழற்சி முறையில் சிறுமியை ஒரு நிமிடம் கூட மொபைல் எடுக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பெற்றோர் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், மறுபுறம் இது சிறுமியின் மனநிலையைப் பாதிக்கும் என்றும், இது போன்ற தீவிரக் கட்டுப்பாடு தீர்வாகாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் அடிமைத்தனம் மற்றும் அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளுக்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.