தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 சட்டசபைத் தேர்தலையொட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைக் குறித்து கருத்து தெரிவித்தார்.

“2006-ஆம் ஆண்டு விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு மக்கள் ஆதரவை பெற்றார். அதேபோன்று தற்போது த.வெ.க. தலைவர் விஜய் தனியாக நின்றாலும்கூட அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மக்கள் நலனுக்காக அரசியல் நடைபெற வேண்டிய அவசியம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். “வாக்கு பணம், வாக்கு திருட்டு, கள்ள ஓட்டு போன்ற சிக்கல்களை சீராக  வேண்டும்.

தேர்தல் ஆணையம் பொம்மையாக செயல்படாமல், நடைமுறை சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அரசியல் என்பது மக்களுக்காக இருக்கவேண்டும்; மக்களுக்காக ஆட்சி நடைபெறவேண்டும். மக்கள் நலமாக இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும்” என்றார்.

மேலும், “விஜய், கூட்டணி குறித்து இனி பதிலளிக்க விருப்பமில்லை; மக்கள் பிரச்சனை பற்றி கேளுங்கள்” எனவும் வலியுறுத்தினார்.