திருச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக போது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக – தேமுதிக கூட்டணி என்பது வெற்றி கூட்டணி. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்.

உறுதியாக இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.