பெரும்பாலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றே எழுதவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவன், தன் இரண்டு வயதிலேயே ஆன்லைன் வீடியோக்களை பார்த்து படிக்க கற்றுக்கொண்டான் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெடி ஹோப்ஸ் என்ற அந்தச் சிறுவன் தனது இரண்டு வயதிலேயே வெவ்வேறு மொழிகளில் 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணவும் கற்றுக்கொண்டான். இப்போது டெடி 7 மொழிகளை படித்து வருகிறான். அதுமட்டுமல்லாமல் மிக இளம் வயதிலேயே அதிக IQ உள்ளவர்களின் அமைப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.