கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் விஜய் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி மாணவரான சிவமணிகண்டன்(19) மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும் கடைக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி விஜய்யிடம் இருந்த 500 ரூபாயை பறித்து விட்டு தப்பி ஓடினர்.

இதுகுறித்து விஜய் பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிவமணிகண்டன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.