கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போடிப்பாளையம் பகுதியில் நஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் மூதாட்டியிடம் சென்று உங்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் மளிகை கடை தானே நடத்தி வருகிறீர்கள்? என கேட்டுள்ளார். இதனையடுத்து நானும் போடிபாளையத்தில் தான் வசித்து வருகிறேன்.

இப்போது நான் ஊருக்கு தான் செல்கிறேன். நீங்களும் என்னுடன் வருகிறீர்களா என கேட்டுள்ளார். இதனால் மூதாட்டி அந்த நபருடன் இருசக்கர வாகனத்தில் எரி சென்றுள்ளார். இதனையடுத்து பிரதமரின் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பித்தால் மாதம்தோறும் உதவித் தொகை கிடைக்கும் என அந்த வாலிபர் கூறியுள்ளார். உடனே அந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என மூதாட்டி கேட்டுள்ளார்.

அதற்கு நானே விண்ணப்பித்துக் கொடுக்கிறேன் எனக்கு கூறி முதாட்டியிடம் புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் புகைப்படம் இல்லை என நஞ்சம்மாள் கூறியுள்ளார். இதனால் அந்த நபர் மூதாட்டியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சங்க சங்கிலி அணிந்த புகைப்படத்தை வைத்து விண்ணப்பித்தால் உதவி தொகை கிடைக்காது என அவர் கூறியதை நம்பி மூதாட்டி 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார்.

அவர் அங்க சங்கிலியை ஒரு காகிதத்தில் மடித்து வைத்து மூதாட்டியிடம் கொடுத்துள்ளார். பின்னர் விண்ணப்பத்தில் ஓட்டுவதற்காக ஸ்டாம்ப் வாங்கி வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் மூதாட்டி வாலிபர் கொடுத்த காகிதத்தை பிரித்து பார்த்துள்ளார். அப்போது தங்க சங்கிலிக்கு பதிலாக சிறு சிறு கற்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.