டெக் உலகின் ஜாம்பவான் எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தில் இப்போது ஒரு மிகப்பெரிய ‘எக்ஸோடஸ்’ (ஒட்டுமொத்த வெளியேற்றம்) நடந்து வருகிறது. கடந்த 48 மணிநேரத்திற்குள் மட்டும் இரண்டு முக்கிய நிறுவனர்கள் (Co-founders) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
திங்கட்கிழமை இரவு டோனி வு (Tony Wu) வெளியேறிய நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்குள் மற்றொரு முக்கியத் தூணான ஜிம்மி பா (Jimmy Ba) தனது விலகல் முடிவை அறிவித்துள்ளார். xAI தொடங்கப்பட்டபோது இருந்த 12 நிறுவனர்களில், இப்போது 6 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
சமீபத்தில் xAI நிறுவனத்தை தனது மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) உடன் எலான் மஸ்க் இணைத்ததே இந்த அதிருப்திக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
“2026-ம் ஆண்டு மனித குலத்திற்கே மிக முக்கியமான ஆண்டாக இருக்கும், நான் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறேன்” என்று ஜிம்மி பா தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக ‘க்ரோக்’ (Grok) ஏஐ-ஐ கொண்டு வந்த மஸ்க்கிற்கு, தனது சொந்த டீமே பாதியாகக் குறைந்து வருவது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
