+2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு மே 30 முதல், மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. அதன்படி விருப்பமான மாண்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் இன்று அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதற்காக விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் மட்டும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் வெளியாகும். இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்கள், விடைத்தாளில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.