மதுரை மாவட்டத்தின் சொரிக்காம்பட்டி அருகே கோழிப்பண்ணையில் பணியாற்றிய 25-வயது கண்ணன் மற்றும் 25-வயது கலாசூர்யா என்பவர்கள் நடந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது கலாசூர்யா, இதற்கு முன் இரண்டு திருமணங்கள் செய்து, அந்த 2-வது கணவரிடமிருந்து 2 வயது சிவானி என்ற பெண் குழந்தையை பெற்றிருந்தார். கடந்த மாதம், கலாசூர்யா மற்றும் கண்ணன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கண்ணன் 2 வயது குழந்தை அவர்களுக்கு “தொந்தரவு” என்று அன்றாடம் கூறி வந்ததுள்ளார்
இதனால் குழந்தைய கடந்த மாதம் 5-ந் தேதி கண்ணன் கழுத்தை நெரித்து கொல்லும் வகையில் தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். அப்பொழுது கலாசூர்யா கடைக்கு சென்றிருந்தார்.
பின்னர் இருவரும் சேர்ந்து, குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி —அருகிலுள்ள காட்டுப்பகுதியின் புதரில் மறைத்து விட்டனர். அதன் பிறகு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கலா சூரியா கோபத்தில் தன்னுடைய தாயார் வீட்டிற்கு கேரளாவுக்கு சென்று விட்டார்.
அங்கு அவரின் தாயார் சந்தியா குழந்தையை எங்கே என்று கேட்டதற்கு அவரது மகள் சரியாக பதில் அளிக்காததால் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் கொடுக்க குழந்தையை மூன்றாவது கணவருடன் சேர்ந்து கொன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில் கண்ணன் மற்றும் கலாசூரியா இருவரும் சேர்ந்து குழந்தையை கொலை செய்து மூட்டையில் கட்டி வீசியது தெரியவந்த நிலையில் தற்போது குழந்தையின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
