இணைய உலகத்தில் எண்ணற்ற வீடியோக்கள் வலம் வந்தாலும், சில காட்சிகள் நம் மனதை ஆழமாகத் தொட்டுச் செல்லும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு தாயின் வீடியோ, பார்க்க சாதாரணமானதாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் இருக்கும் உழைப்பும் தியாகமும் நெட்டிசன்களைக் கண் கலங்க வைத்துள்ளது.
பரபரப்பான போக்குவரத்து நிறைந்த தெருக்களில், ஒரு தாய் தனது பள்ளிச் சீருடை அணிந்த மகனைச் சைக்கிளில் அமரவைத்து பள்ளிக்கூத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சிதான் அந்த வைரல் வீடியோ. மகனின் முதுகில் கனமான பள்ளிப் பையும், சைக்கிள் ஹேண்டிலில் தண்ணீர் பாட்டிலும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. வெயிலோ மழையோ பாராமல், முகத்தைத்துணியால் மூடிக்கொண்டு, மிகுந்த கவனத்துடன் சைக்கிளை மிதித்துச் செல்லும் அந்தத் தாயின் ஒரே நோக்கம், தன் பிள்ளை எவ்விதத் தடையுமின்றிச் சரியான நேரத்தில் பள்ளியைச் சென்றடைய வேண்டும் என்பது மட்டும்தான்.
माँ बाप के प्रेम और बलिदान का ऋण दुनियाँ का कोई भी संतान चुका ही नहीं सकता।
मगर अफ़सोस बड़ा होकर वही बच्चे कहते हैं आपने हमारे लिए किया ही क्या है।
जिनको ऊँगली पकड़कर चलना सिखाते हैं
वे बच्चे माँ बाप को वृद्ध आश्रम छोड़ जाते हैं। pic.twitter.com/hMtsyMIUav— अ’मीर (@_CopAmir_) August 13, 2026
இது நம் அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு காட்சியாக இருக்கலாம். ஆனால், இதன் ஆழத்தை யோசித்தால், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகப் பெற்றோர்கள் செய்யும் எண்ணற்ற தியாகங்களின் ஒட்டுமொத்த வடிவமாக இது தெரிகிறது. சொந்தமாக ஒரு தனிப்பட்ட வாகனம் இல்லாத நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களில், பள்ளிக்கூடத்திற்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்ல சைக்கிள், பேருந்து அல்லது நடந்தே செல்வதுதான் வழக்கமாக உள்ளது.
எத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும், தூரமான பாதைகளிலும், அல்லது வானிலை மாற்றங்களாக இருந்தாலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு எந்தவிதத் தடையையும் ஏற்படுத்த விரும்புவதில்லை. இந்த வைரல் வீடியோவில் தோன்றும் தாயும் இதே போன்றதொரு போராட்டக் குணம் மற்றும் அர்ப்பணிப்பின் சாட்சியாகத் திகழ்கிறார்.
இந்தக் காட்சியைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள், பலரும் தங்கள் சொந்தப் பெற்றோரின் போராட்டங்களை நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். ஒரு குழந்தையின் இறுதி வெற்றிக்கு அவனது சொந்த உழைப்பு மட்டுமே காரணமல்ல, பின்னணியில் பல வருடங்களாகப் பெற்றோர் சிந்தி வியர்வையும் தியாகமும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
