தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வரும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பதும் மற்றும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக அமமுக கட்சியில் இருந்து பலர் விலகிய அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அதிமுகவிலிருந்து பலர் பிரிந்து அவருடன் இணைந்தனர். தற்போது மீண்டும் அனைவரும் அதிமுகவுக்கே அமமுகவிலிருந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர். சுரேஷ், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார். மேலும் முன்னதாக டிடிவி தினகரன் விசுவாசம் இல்லாதவர்கள் கட்சி மாறி வருவதாக சாடி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
