சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 96,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13134 ரூபாய்க்கும், ஒரு சவரன் 105072 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 199 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,99,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
