நடிகர் தனுசை  இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வெளியான தகவலுக்கு நடிகை மீனா மறுப்பு தெரிவித்துள்ளார். பணத்திற்காக எதையாவது எழுதுவீர்களா என்று ஊடகங்களை சாடிய மீனா, உண்மை அறிந்து எழுதுவது நல்லது என தெரிவித்தார். தனது பெற்றோர் மற்றும் மகளின் எதிர்காலத்தை பற்றியும் சந்திக்குமாறு கேட்டுக் கொண்ட அவர் இரண்டாவது திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்படி இருந்தால் தான் வெளிப்படுத்துவேன் எனவும் கூறினார்.