தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் சத்யராஜ் மற்றும் விஜயகாந்த். இவர்கள் இருவரும் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவின் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறார். இவர் அவ்வப்போது ஏதாவது முக்கிய நாட்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை சந்திப்பார். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் என்று புத்தாண்டை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மற்றும் தியாகு போன்றவர்கள் நடிகர் விஜயகாந்தை அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது சத்யராஜ் விஜயகாந்த்துக்கு பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் விஜயகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர்கள் சத்யராஜ் மற்றும் தியாகு அவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்த மகிழ்ச்சியான தருணம் என்று விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.