இமைக்கா நொடிகள் பட நடிகர் அனுராக் காஷ்யப் தனது ரசிகர்களுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ரசிகர்கள் என்னை சந்திக்க விரும்பினால் 30 நிமிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சமும் கட்டணம் நிர்ணயித்துள்ளேன். அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ வேண்டாம். பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.