2026 டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பலமான ஆஸ்திரேலிய அணியை ஜிம்பாப்வே வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. ஜிம்பாப்வேயின் இந்த வரலாற்று வெற்றியை இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் செவாக், இந்திய அணியின் ‘லக்கி சார்ம்’ (Lucky Charm) என்று கொண்டாடி வருகிறார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள செவாக், ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரத்தைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, உலகக்கோப்பை தொடர்களில் எப்போதெல்லாம் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
1983: ஒருநாள் உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது -> கபில்தேவ் தலைமையில் இந்தியா சாம்பியன் ஆனது!
2007: முதலாவது டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது -> தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது!
2026: இப்போது மீண்டும் டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது!
”அன்புள்ள ஜிம்பாப்வே.. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்கு ஒரு டின்னர் பாக்கி!” என்று செவாக் நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார். நடப்பு சாம்பியனான இந்தியா, இந்த முறையும் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையை இந்த ‘லக்கி சார்ம்’ சென்டிமென்ட் இந்திய ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது.
