இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்திற்கு வெளியிலும் ஏகப்பட்ட வாணவேடிக்கைகள் நடக்கும். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத் தற்போது ஒரு “மெகா” அறிவிப்பை வெளியிட்டுச் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளார். சமீபகாலமாகப் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை வறுத்தெடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் ஷேசாத், இப்போது ஒரு வினோதமான சவாலை முன்வைத்துள்ளார்.

​”பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மட்டும் இந்தியாவைத் தோற்கடித்தால், மைதானத்திற்கு வந்திருக்கும் ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் நானே செலவு செய்து மிகப்பெரிய விருந்து (Mega Feast) வைப்பேன்” என்று அவர் கூறியுள்ளார். இதைக் கேட்ட இந்திய ரசிகர்கள், “அண்ணே.. அப்போ மைதானத்துக்கு வர்றவங்க பட்டினியா தான் இருக்கணுமா?” என்று கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

​உண்மையில், பாகிஸ்தான் அணியின் பலவீனமான ஆட்டத்தை மறைக்கவும், ரசிகர்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் ஷேசாத் இப்படி ஒரு நாடகத்தை ஆடுவதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆட்டத்தைப் பற்றி உருப்படியாகப் பேசத் துப்பில்லாமல், இதுபோல உணர்ச்சிகரமான “சாப்பாட்டு அரசியலை” கையில் எடுப்பது ஷேசாத்தின் வழக்கம் தான். “இந்தியாவிடம் தோற்பது உறுதி என்பதால் தான், ஷேசாத் தைரியமாக இப்படிச் சவால் விடுகிறார்” என்று நெட்டிசன்கள் இணையத்தில் அகமது ஷேசாத்தை வச்சுச் செய்து வருகின்றனர்.