கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக  வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்தின் முன்ஜாமின் மனுவை மதுரை கிளை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிய நிலையில், ஆனந்த் தலைமறைவாகி இருந்தார். கடந்த 15 நாட்களாக அவர் எங்கே உள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அது தவெகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆனந்த் இன்று (அக்.14) தவெகத் தலைவர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கரூர் வழக்கு குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தவெக வட்டாரத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பு உருவாகியுள்ளது