கரூர் கூட்ட நெரிசல் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்திக்க தீர்மானித்துள்ளார். இந்த சந்திப்பின் பின்னர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றை விரிவாக நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பில், கரூர் சம்பவம் குறித்த அவருடைய கருத்துகள், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டங்கள் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தவெக நிர்வாகி நிர்மல் குமார், விஜய்யுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஊடகங்களிடம் பேசியபோது, “பலியானவர்களின் குடும்பத்தினரை விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் நேரில் சந்திக்க உள்ளார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தச் சந்திப்பில் விஜய் தனது தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்குவது தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது