கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, நாம தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த உத்தரவை விமர்சித்திருந்தார்.
அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சீமானின் விமர்சனத்துக்கு பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது நீதியையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கை.
இதை யாரும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சீமான் இந்த உத்தரவைப் பற்றி பதற்றப்படுவதற்கான காரணம் என்ன? மற்ற வழக்குகளில் முதல்வர் சிபிஐ விசாரணை கோரியபோது அவர் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார். மேலும், “நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்; அரசியல் நலனுக்காக மக்கள் மனதில் குழப்பம் உருவாக்க வேண்டாம்” எனவும் அண்ணாமலை வலியுறுத்தினார்
