செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, நீட்டுக்கு ஒரு காரணம் சொன்னேன். தமிழ்நாட்டில் 1  லட்சத்து  50 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறான். 10,000 பேருக்கு தான் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள். 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியே நிற்கிறான். 700 மார்க் எடுத்தவர்கள் அரசு கல்லூரிக்கு குறைந்த கட்டணத்தில் இடம்பெற்று விடுகிறான். பிறகு 150 மார்க் எடுத்தவன் 1  கோடி ரூபாய் கொடுத்து இடம்பெற்றுகிறான். இடையில் இருக்கிறவனுக்கு இடம் கிடைப்பதில்லை. ஆகவே பணம் வைத்திருப்பவனுக்கு இடம் கிடைக்கிறது. அதிக மதிப்பெண் எடுத்திருபவனுக்கு இடம் கிடைக்கிறது. நல்ல மதிப்பெண் எடுத்து, நடுவில் இருக்கிறவனுக்கு இடம் கிடைப்பதில்லை.

நான் கேட்கிறேன் நீட் போய், பிளஸ் டூ தேர்வு வந்தால் 11,000 பேருக்கு இடம் கிடைக்குமா ? அதே பத்தாயிரம் தானே…  அதற்கு தீர்வு தமிழ்நாடு தன்னுரிமை கழகம் சொல்லுகின்றது. உலகம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மாணவர்கள்  வரவேற்கின்றன. இவர்களுக்கு Capitation Fees எல்லாம் சீனாவில் கேட்பதில்லை… ரஷ்யாவில்  கேட்பதில்லை…. பெல்ஜியத்தில் கேட்பதில்லை…. ஜெர்மனியில் கேட்பதில்லை… எங்கும் கேட்பதில்லை….

ஆகவே இங்கே உள்ள இளைஞர்களுக்கு எல்லாம் கடன் வசதியை வங்கி மூலம் அரசு உத்தரவாதம் கொடுத்து,  இவர்கள் அனைவரையும்  வெளிநாட்டுக்கு…. மருத்துவ கல்லூரிக்கு அனுப்புங்கள். இதற்கு வசதி செய்து கொடுங்கள். ஐந்தாண்டு அவன் படித்து விட்டு வந்த பிறகு உனக்கு செல்லாது..  நீ இன்னொரு தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லாமல்,  உண்மையிலேயே அவர்கள் இங்கே தொண்டு செய்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யுங்கள்.

சீன கல்லூரியை விட உன்னுடைய கல்லூரி ரொம்ப சிறந்ததோ…  அவன் உலகத்திலையே அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் இருக்கிறான்.  ஆகவே நான் சொல்கிறேன்,  உன்னால் போதிய கல்லூரியை கட்ட முடியவில்லை.  வெளிநாடுகளுக்கு அனுப்பு. அதற்கு வேண்டிய கேரண்டியை பேங்க் மூலம் கொடு. அவர்களை கடன் பெற்றுக்கொள்ள சொல்லு. டாக்டர் ஆன பிறகு அவர்கள் அந்த கடனை தீர்க்கட்டும். இல்லாவிட்டால் நீ தீரு.  இப்ப என்ன கெட்டுப் போய்விட்டது? ஆகவே தமிழ்நாடு தன்னுயிர் கழகம் எல்லாவற்றிற்கும் தீர்வு வைத்திருக்கிறது என தெரிவித்தார்.