ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணை சந்தித்து, இருவரும் வீடியோக்கள் மற்றும் மெசேஜ்கள் பரிமாறிக் கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் “ஐ லவ் யூ” என்ற செய்தியை அனுப்ப, சிறுவனும் அதற்கும் பதிலாக “ஐ லவ் யூ டூ” என பதிலளித்தார். அடுத்த நாள், ஒரு அடையாளம் தெரியாத நபர் அந்த சிறுவனுக்கு அழைத்து, “நீங்கள் இன்ஸ்டாகிராம் பெண்ணிடம் அப்படி பேசினதால் அவரது கணவர் போலிஸ் நிலையத்தில் இருக்கிறார்; உடனே வர வேண்டும்” என மிரட்டினார். இதனால் பயந்த சிறுவன், அழுதபடி “என்ன சொன்னாலும் செய்வேன்” என கூறியதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த நபர் ₹11,000-ஐ ஆன்லைனில் பறித்துக் கொண்டார்.
சைபர் குற்றவாளிகள் தற்போது புதிய மோசடி முறையை கையாள ஆரம்பித்துள்ளனர். “ஐ லவ் யூ” போன்ற சொற்களை உளவு போன்று பதிவு செய்து, அதனை மிரட்டும் ஆயுதமாக மாற்றி, குறிப்பாக இளைய தலைமுறையினரை தாக்குகிறார்கள். இத்தகைய நேரங்களில் அவசரமாக பணம் அனுப்புவது தவிர, பெற்றோர் மற்றும் போலிஸ் துறையின் உதவியை உடனடியாக நாட வேண்டும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இளம்பெண்கள் அல்லது இளைஞர்களுடன் சமூக ஊடகங்களில் தொடர்பில் இருப்பதிலும் கூடுதல் கவனம் தேவை எனவும் கூறப்படுகிறது.
