ஞாயிற்றுக்கிழமை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் விளம்பரப் ப்ரோமோவில், “பொண்டாட்டி கிட்ட இறங்கிப் போனவன் தோத்ததா சரித்திரம் இல்ல” என்ற வசனத்தைப் பயன்படுத்தியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் ரசிகர்களைக் கவரும் வகையில் இந்த வசனத்தை தொலைக்காட்சியினர் பயன்படுத்தினாலும், இது ‘விஜய்’ ரசிகர்களைக் குறிவைத்துச் சொல்லப்பட்டதா அல்லது அவர்களை வம்புக்கு இழுக்கும் விதமாக உள்ளதா என்ற கோணத்தில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஒரே வசனத்தின் மூலம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் கருத்து மோதல்கள் வெடித்துள்ள நிலையில், தொலைக்காட்சியின் இந்த விளம்பர யுக்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
