தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள், முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் படித்துவிட்டு, மீண்டும் அரசுப் பணியில் சேராதவர்கள் மீது தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
சேவை ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்று, படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது ஒப்பந்த நிபந்தனை. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறிய 1,420 மருத்துவர்கள் மீது தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் 680 மருத்துவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 740 மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் சேவையை உறுதி செய்யவே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, கடமையைச் செய்யத் தவறும் மருத்துவர்களைப் பணியிலிருந்து நீக்குவது போன்ற கடுமையான தண்டனைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
View this post on Instagram
“>
இந்த அரசின் அதிரடி முடிவு மருத்துவத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணிக்கான ஒப்பந்தத்தை மீறும் இத்தகைய போக்கு, மற்ற அரசுத் துறைகளிலும் பின்பற்றப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் இது சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.
