நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 1,377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது. பெண் பணியாளர் செவிலியர் 121, மெஸ் ஹெல்பர் 442, இளநிலை செயலக உதவியாளர் 381, லேப் அட்டெண்டன்ட் 161 உள்ளிட்ட இதர பணிகளுக்கு 10 முதல் முதுகலை வரையிலான தகுதிகள் உள்ளன. மேலும் விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.