2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக, இப்போதே தேர்தல் பணிகளை திமுக விறுவிறுப்பாக்கி உள்ளது. இதற்காக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில், 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

​இந்த 12 பேர் கொண்ட குழுவினர், வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணத்தின்போது, வெறும் கட்சிக்காரர்களை மட்டும் சந்திக்காமல் பொதுமக்கள், சிறு குறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும், எதிர்பார்ப்புகளையும் கேட்க உள்ளனர். இந்தத் தகவல்களை அடிப்படையாக வைத்துத்தான், “மக்களுக்கான தேர்தல் அறிக்கை” தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது.