மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள் https://sss.nic.in என்ற இணையதளம் மூலமாக வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு கணினி வழி தேர்வு ஆக ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும் வழக்கமாக எஸ்எஸ்சி போட்டி தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது எஸ்சி போட்டி தேர்வுகள் தமிழ்மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.