90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றிக்கு பேன்சி நம்பர் வாங்க இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் உள்ள நபர் ஒருவர் 90 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான ஹெச்பி 99-9999 என்ற பேன்சி பதிவு எண்ணை பெறுவதற்காக சிம்லா ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பதிவு மற்றும் உரிமை வழங்கும் ஆணையம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில் இந்த நபர் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த பேன்சி நம்பர் பெறுவதற்காக 26 ஏலதாரர்கள் வரை போட்டியிட்ட நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள வாகனத்தின் உரிமையாளர் இந்த பேன்சி பதிவு என்னை 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆயிரம் ரூபாய்க்கு தொடங்கிய பதிவு ஏலம் இறுதியில் 1 கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வரை விற்பனையானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநில வரலாற்றில் இரு சக்கர வாகன பதிவு எண்ணிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும் என இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தில் கூற்றுப்படி தெரிய வந்து உள்ளது.