சமீப காலமாக காதல் ஜோடிகள் சாலையில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் காட்சிகளை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது பார்க்கவே முகம் சுளிக்கும் விதமாக இருக்கிறது. இருப்பினும் அவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக ரோட்டில் கொஞ்சி குலாவுகிறார்கள். சமீபத்தில் தான் இதுபோன்ற் ஒரு சம்பவம் நடந்த நிலையில் தற்போது அதேபோன்ற சம்பவம் ஒன்று மீண்டும் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஹர்தோய் பகுதியில் ஜோடி ஒன்று பைக்கில் சென்றபடியே ரொமான்ஸ் செய்கின்றனர். இளம்பெண் பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து இளைஞரை கொஞ்சிகொண்டு வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.