திரைப்பட பாணியில் பேருந்தில் ஒரு ரூபாய் தர மறுத்து நடத்துனர் திட்டிய சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றம் சென்று நீதியை வென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் 2019 ஆம் ஆண்டில் பேருந்தில் பயணித்த போது நடத்துனர் மீதி சில்லறையான ஒரு ரூபாயை தர மறுத்து திட்டியதாக அவர் மனு ஒன்றை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

மேலும் 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ரமேஷ் நாயக்கின் குறைகளை கருத்தில் கொண்ட பெங்களூரு நுகர்வோர் தீர்வு ஆணையம் நீதிமன்ற கட்டணமாக ஆயிரம் ரூபாயுடன் பகுதி நிவாரணமாக 2000 ரூபாய் செலுத்துமாறு பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகமான பிஎம்டிசிக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் கொண்டு வரப்பட்ட போது இது ஒரு அற்பமான பிரச்சனை என்றும் பி.எம்.டி.சி எதிர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இருப்பினும் ரமேஷ் நாயக் தலைமை தேர்வு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். இது நிறுவனத்திற்கு அற்பமான பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் உரிமையாளருக்கு இது உரிமை பிரச்சனை. எனவே அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அந்த தொகையை 45 நாட்களுக்குள் செலுத்துமாறு பி.எம்.டி.சி-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறினால் ஆண்டிற்கு 6000 ரூபாய் வரை வட்டி செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது