மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக  CUTE தேர்வு யூசிஜியால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  CUET தேர்வில் கணிதம், கணக்கு பதிவியல் தாள்களை எழுதும் மாணவர்களுக்கு 15 முதல் 20 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வந்த கோரிக்கைகள் வந்துள்ளது.

இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ், ஆங்கிலம், இந்தி என 13 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வு மே 21 முதல் 31 வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 12 கடைசி ஆகும்.