ஒரு காலத்தில் பாலிவுட் மட்டும் தான் மிகப்பெரிய படங்களை கொடுக்கும் என்ற நிலை மாறி தற்போது தென்னிந்திய சினிமாக்களிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகி அதற்கு தகுந்தார் போன்று வசூல் சாதனையும் புரிந்து வருகிறது. குறிப்பாக பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் போன்ற படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது‌. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பான் இந்தியா படம் என்றால் தற்போது பலரது நினைவிற்கும் பாகுபலி தான் முதலில் நினைவிற்கு வரும். ஆனால் தற்போது தமிழில் உருவாகும் ஒரு படம் பாகுபலி படத்தை பின்னுக்கு தள்ளி மிகப்பெரிய பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

அதாவது நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் 38 மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. பொதுவாக பான் இந்தியா படங்கள் 5 மொழிகளில் தான் பெரும்பாலும் ரிலீஸ் ஆகும். ஆனால் தற்போது நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் மொத்தம் 7 நாடுகளில் நடைபெற்றுள்ளது. அதோடு தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்று உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த வருடத்திற்குள் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.