தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் படகு சேவையையும் ரத்து செய்துள்ளதாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.