நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா புகழ்பெற்ற மலைச்சிகரம்.  இது அந்த மாவட்டத்தில் உள்ள  சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளது. இந்நிலையில் இந்த சிகரத்தை, சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நாளை முதல் அனுமதி வழங்கப்பட உள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல கடந்த ஒரு வாரமாக வனத்துறை தடை விதித்திருந்தது. இந்த நிலையில், பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் நாளை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.