தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் ஈரோடு பவானி ஆறு, நெல்லை தாமிரபரணி மற்றும் குமரி கோதை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீரோட்டம் அதிகமாக இருப்பதால் ஆறுகளில் இறங்கி குளிக்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.