தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நமிதா. இவர் அஜித், விஜய், விஜயகாந்த் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜக கட்சியின் பிரமுகராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை நமிதா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் தனுஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க  நடிகை நமீதாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அதன்படி நமிதாவும் அவருக்கு கால் சீட் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த படத்தில் நடிகர் தனுசுக்கு பதிலாக தயாரிப்பாளரின் உறவினர் ஒருவர் நடித்துள்ளார். இதனால் கடுப்பான நமிதா அந்த படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். ஆனால் எப்படியோ ஒருவழியாக  அந்த படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். இருப்பினும் அந்த படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர் பெயர் போன்றவற்றை தான் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகை நமீதாவையே ஒருவர் ஏமாற்றிவிட்டாரா? என அவருடைய ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.